தீவிரப் படுத்தப்பட்ட இந்திரதனுஷ் 2.0 (Intensified Mission Indradhanush – IMI) திட்டத்தின் கீழ் எட்டு நோய்களைத் தடுப்பதற்காக 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 02 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஒரு தடுப்பூசி இயக்கத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
பயனடைவோர் (இலக்காக உள்ளவர்கள்): 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள்.
இத்திட்டத்தின் நோக்கம்: 27 மாநிலங்களில் உள்ள 272 மாவட்டங்களில் முழுமையான நோய்த் தடுப்பு மருந்து வழங்கக் கூடிய ஒரு இலக்கினை அடைவதற்காக.
இத்திட்டத்தின் காலம்: 2019 டிசம்பர் மற்றும் 2020 மார்ச் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட காலகட்டம்.
IMI தடுப்பூசியானது தொண்டை அழற்சி, இருமல், இழுப்புவாதம், இளம்பிள்ளைவாதம், காசநோய், தட்டம்மை, மூளைக் காய்ச்சல் மற்றும் கல்லீரல் அழற்சி(பி வகை) ஆகிய நோய்களை உள்ளடக்கியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஆகியவற்றிற்கான தடுப்பூசிகளும் வழங்கப் படுகின்றன.