இந்து பிசினஸ்லைன் இதழின் மாற்றத்தினை உருவாக்குபவர் விருதுகள்
November 9 , 2023 632 days 341 0
பிசினஸ்லைன் இதழின் மாற்றத்தினை உருவாக்குபவர் விருதுகள் ஆனது, தற்காலத்தில் உலகில் நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்திய அசாதாரண சிந்தனையாளர்கள் மற்றும் சாதனையாளர்களை அங்கீகரித்துக் கௌரவமளிக்கும் வகையில் கருத்தாக்கப்பட்டது.
மாற்றத்தை உருவாக்குபவர் என்பவர் ஒரு மில்லியன் மனிதர்களில் ஒருவர் என்ற அரிதானவர், கனவு காண்பவர், அவர்களின் புரட்சிகரச் சிந்தனைகளால் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த மாற்றத்தை ஏற்படுத்தியவர் ஆவர்.
விருது பெற்றவர்கள்
இந்திய ரிசர்வ் வங்கி – 2023 ஆம் ஆண்டின் மாற்றத்தினை உருவாக்குபவர்
அமுல் - மாற்றத்தினை உருவாக்கும் மரபார்ந்த நிறுவனம்
ஹெர்கே மற்றும் பெண்கள் கல்வி (கூட்டாக விருது பெற்றவர்கள்) – மாற்றத்தினை உருவாக்குபவர்: சமூக மாற்றம்.
ஸ்டல்லாப்ஸ் டெக்னாலஜிஸ் - மாற்றத்தினை உருவாக்குபவர்: எண்ணிம மாற்றம்
பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா – மாற்றத்தினை உருவாக்குபவர்: நிதியியல் மாற்றம்.