இந்து வாரிசுரிமைச் சட்டம் தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு
November 14 , 2024 300 days 445 0
1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டத்தில், 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு மேற்கொண்ட ஒரு திருத்தம் என்பது, இறந்தக் கூட்டுடைமையுரிமையின் இன மரபு உரிமையாளரின் சொத்துக்களில் மகன்களுக்கு வழங்கப்படுவது போலவே சமமானப் பங்கைப் பெறுவதற்கான உரிமையை மகள்களுக்கும் வழங்குகிறது.
ஆனால், இந்தச் செயல்பாடானது, முதலாம் வகை சட்டப்பூர்வ வாரிசுகள் என்ற ஒரு தகுதியில் விதவை மற்றும் தாய் ஆகியோர் பெற வேண்டிய சொத்தின் அளவைக் குறைய வழி வகுக்கிறது.
இந்த 1956/2005 ஆம் ஆண்டு சட்டம் ஆனது உயில் எதுவும் இன்றி உயிரிழந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் மற்றும் பௌத்தர்களுக்குப் பொருந்தும்.