மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பகீரத்புரா பகுதியில் நகராட்சி நீர் விநியோகக் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் மாசுபட்ட குடிநீரால் நீர் மாசுபாடு சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த மாசுபட்ட நீரானது குடியிருப்பாளர்களிடையே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஆறு பேர் இறந்துள்ளதாகவும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நீர் விநியோகம் என்பது தொற்றுக்கான ஒரு ஆதாரமாக இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தியது.
மாசுபாட்டைக் கட்டுப்படுத்திட வேண்டி குழாய்கள் மற்றும் குழாய்க் கிணறுகளில் குளோரினேற்றம் செய்யப்பட்டது.