இந்தியாவின் வெளியுறவு அமைச்சரிடம் அணுகல் பிரகடனத்தை ஒப்படைப்பதன் மூலம் ஸ்பெயின் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பில் (IPOI) இணைந்தது.
IPOI என்பது கடல்சார் ஒத்துழைப்புக்கான ஒரு தன்னார்வ, ஒப்பந்தமற்ற கட்டமைப்பு ஆகும் என்பதோடு2019 ஆம் ஆண்டில் SAGAR (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) கோட்பாட்டின் கீழ் இந்தியாவால் இது தொடங்கப் பட்டது.
சுதந்திரமான, தடையற்ற, உள்ளடக்கிய மற்றும் விதிகள் சார்ந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும்.
இது கடல்சார் பாதுகாப்பு, சூழலியல், வளங்கள், பேரிடர் மேலாண்மை, அறிவியல் & தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் இணைப்பு ஆகியவற்றில் நடைமுறை சார் ஒத்துழைப்பில் கவனம் செலுத்துகிறது.
உலக நாடுகள் தானாக முன்வந்து தனிப்பட்ட கருத்துருப் பிரிவுகளை வழிநடத்த முடியும் என்பதோடுமேலும் இந்த முன்னெடுப்பு ராணுவம் அல்லாத, தொகுதி அல்லாத அணுகுமுறையை மேற்கொள்கிறது.