இந்த நூற்றாண்டின் வறட்சியான வசந்த காலம் - ஐக்கியப் பேரரசு
May 25 , 2025 92 days 183 0
பிரிட்டன் வானிலை ஆய்வு அலுவலகமானது, தற்போதைய வசந்த காலத்தினை ஒரு நூற்றாண்டின் 'வறட்சியான' பருவம் என்று அறிவித்துள்ளது.
இந்த வசந்த காலத்தில், வழக்கமாகப் பெய்யும் 229 மில்லி மீட்டர் மழைப்பொழிவுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டில் 80 மில்லி மீட்டர் மட்டுமே மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.
இது 100 ஆண்டுகளுக்கும் மேலான வறட்சியான வசந்த காலத்தினைக் குறிக்கிறது.
ஐக்கியப் பேரரசு ஆனது கடைசியாக 2022 ஆம் ஆண்டு கோடை காலத்தில் அதிகாரப் பூர்வ வறட்சி காலத்தினை எதிர்கொண்டது.
2022 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் எதிர்பார்க்கப்பட்ட மழைப்பொழிவில் சுமார் 78 சதவீத மழைப்பொழிவு பதிவானது என்ற ஒரு நிலையில் இந்த ஆண்டு இது வரையில் வெறும் 35 சதவீதம் மழைப்பொழிவு மட்டுமே பதிவாகியுள்ளது.