ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய தனது காலனித்துவ ஆட்சியின் போது தற்போதைய நமீபியா பகுதியில் வாழ்ந்த ஹெரேரோ மற்றும் நமா இன மக்களுக்கு எதிராக மேற்கொண்ட இனப்படுகொலைக்கான பொறுப்பினை ஜெர்மனி முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது.
மேலும், நமீபியாவில் செயல்படுத்தப் படும் சமுதாயத் திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காக 1.1 பில்லியன் யூரோ (1.2 பில்லியன் டாலர்) தொகையை ஜெர்மனி அறிவித்துள்ளது.
1904 மற்றும் 1908 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் ஹெரேரோ மற்றும் நமா பழங்குடியின மக்கள் ஜெர்மனிய காலனித்துவ ஆட்சியை எதிர்த்துப் போராடியதைத் தொடர்ந்து ஜெர்மனிய காலனிதத்துவ ஆட்சியர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்று குவித்தனர்.
வாட்டர்பெர்க் போர் என்ற இந்தப் போரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 80000 ஹெரேரோ இன மக்கள் பாலைவனத்தின் வழியே ஜெர்மனியப் படையினால் துரத்தியடிக்கப்பட்டனர்.