இன்சுலின் சமிக்ஞை வழங்கீடு மற்றும் திசுவின் ஆரோக்கியம்
November 24 , 2021 1331 days 570 0
சமிக்ஞை கட்டமைப்பின் மூலமான தகவல் வழங்கீட்டினை இன்சுலின் அளவு எவ்வாறு தகவமைக்கிறது என்பது குறித்து ஒரு புதிய ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.
இன்சுலின் சமிக்ஞை வழங்கீடு என்பது இன்சுலின் இருப்பு மற்றும் இரத்தத்தில் குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்துவதன் அவசியம் குறித்த தகவல்களை தெரிவிக்கும் ஓர் உயிரி வேதியியல் எதிர்வினை ஆகும்.
இன்சுலின் சமிஞ்ஞை வழங்கீட்டிற்கு 2 முக்கிய வழிகள் உள்ளன (AKT மற்றும் ERK).
இவை ஒன்றிணைந்து வளர்சிதை மாற்றத்தையும் வளர்ச்சியையும் சமநிலைப் படுத்துகின்றன.
இவை குறிப்பாக கல்லீரலில் குளுக்கோஸ் சேமிப்பின் அளவைக் கட்டுப்படுத்தச் செய்வதோடு, எலும்புத் தசைகள் மற்றும் கொழுப்பு ஆகியவற்றில் குளுக்கோஸ் பரிமாற்றத்தையும் தூண்டுகிறது.