TNPSC Thervupettagam

இன்ஸ்பிரேஷன்4

September 11 , 2021 1406 days 604 0
  • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமானது 'இன்ஸ்பிரேஷன்4' எனும் உலகின் முதல் அனைத்துக் குடிமக்களுக்கான, ஒரு அரசு சாராத விண்வெளிப் பயணத்தை விரைவில் தொடங்க உள்ளது.
  • இந்தத் திட்டமானது ஸ்பேஸ்எக்ஸால் தனிப்பட்ட முறையில் இயக்கப்படும் க்ரூ டிராகன் என்ற ஒரு விண்கலத்தில் 4 தனியார் குடிமக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும்.
  • இந்தத் திட்டத்தின் கீழ் விண்கலமானது பூமியை 575 கிமீ உயரத்தில் (கீழ்மட்ட புவிச் சுற்றுப்பாதையில்) 3 நாட்கள் சுற்றி வந்து, பின்னர் அட்லாண்டிக் பெருங்கடலில் தரையிறங்க உள்ளது.
  • 2009 ஆம் ஆண்டில் ஹப்பிள் தொலைநோக்கியைப் பழுது பார்க்க விண்வெளி வீரர்கள் சென்றதிற்குப் பிறகு (547 கிமீ) ஒரு குழுவினரால் பயணிக்கப்படும் நீண்ட தூரம் இதுவாகும்.
  • இந்தப் பயணமானது பல சுகாதாரத் தரவுகளைச் சேகரிப்பதற்கான ஒரு வாய்ப்பை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்