இந்த தினமானது இமயமலைச் சூழலியல் அமைப்பின் முக்கியத்துவத்தையும் அதன் பாதுகாப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
இமயமலைப் பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி மற்றும் சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக வேண்டி இது 2015 ஆம் ஆண்டில் உத்தரகாண்டில் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
இந்து குஷ் இமயமலையானது (HKH) சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய நதிகளுக்கான முக்கியமான நீர் ஆதாரமாக விளங்குகிறது.
ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டிற்கான சர்வதேச மையத்தின் (ICIMOD) பனிநிலை புதுப்பிப்பு 2026 ஆனது சராசரியை விட 27.8% குறைவான பனிப்பொழிவு உள்ளதாகப் பதிவு செய்துள்ளது, 12 முக்கிய நதிப்படுகைகளில் 10 நதிப்படுகைகள் இயல்பை விடக் குறைவான பனிப்பொழிவைக் கொண்டுள்ளன.
பனிப்பாறைகள் உருகுவதானது நீண்ட கால இயற்கை நீர் சேமிப்பைக் குறைப்பதோடு உருகும் பனிப்பாறை ஏரிகளால் உருவாகும் திடீர் வெள்ளப் பெருக்கு (GLOFs) போன்ற அபாயங்களையும் அதிகரிக்கலாம்.