'1990 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுவரை இந்து குஷ் இமயமலைப் பிராந்தியத்தில் பனிப்பாறைகளின் மாறும் இயக்கவியல்' என்ற அறிக்கையை சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) வெளியிட்டது.
இந்த அறிக்கையின்படி, 1990 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இந்து குஷ் இமயமலை பிராந்தியத்தில் உள்ள பனிப்பாறைகள் அவற்றின் மொத்தப் பரப்பளவில் சுமார் 12%-ஐ இழந்துள்ளன.
2000-ஆம் ஆண்டிற்குப் பிறகு பனி இழப்பு விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்ற நிலையில் இது உலகளாவிய வெப்பநிலை உயர்வால் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதைக் காட்டுகிறது.
1975 ஆம் ஆண்டு முதல் பனிப்பாறைகள் 27 மீட்டர் வரை பனி தடிமனை இழந்துள்ளன, இது நீண்ட கால வீழ்ச்சியைக் குறிக்கிறது.
ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவுக்கு வெளியே அதிக அளவு பனியைச் சேமித்து வைத்திருப்பதால் இப்பகுதி "மூன்றாவது துருவம்" என்று அழைக்கப்படுகிறது.
பனிப்பாறைகள் உருகுவது கங்கை, சிந்து மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய ஆறுகளைப் பாதித்து, நீர் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.