TNPSC Thervupettagam

இமயமலை பருவநிலை நடவடிக்கை

January 9 , 2026 3 days 21 0
  • ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம் (ICIMOD) ஆனது, இந்து குஷ் இமயமலை (HKH) பிராந்தியத்திற்கான பருவநிலை நிதி குறித்த அறிக்கையை வெளியிட்டது.
  • HKH பிராந்தியத்தில் இந்தியா, சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், மியான்மர் மற்றும் பூடான் ஆகியவை அடங்கும்.
  • இந்தப் பிராந்தியத்தில் பருவநிலைத் தகவமைப்பு ஏற்பு மற்றும் தணிப்புக்கு இந்தியாவிற்கு ஆண்டிற்கு சுமார் 102 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது.
  • பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டின் (UNFCCC) 2020 ஆம் ஆண்டின் முதல் தீர்மான அறிக்கையின் அடிப்படையில், அனைத்து HKH நாடுகளுக்கும் மொத்தமாக ஆண்டிற்கு சுமார் 768.68 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படும்.
  • சீனாவிற்கு ஆண்டிற்கு சுமார் 605 பில்லியன் அமெரிக்க டாலர்கள், பாகிஸ்தானுக்கு சுமார் 40.12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும் வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகியவற்றிற்கு தலா 8.95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும்.
  • பனிப்பாறை உருகுதல், பல்லுயிர்ப்பெருக்க இழப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகள் போன்ற அபாயங்களை இப்பகுதி எதிர்கொள்வதனால், பில்லியன் கணக்கான சுற்றுச்சூழல் அமைப்புகள், வாழ்வாதாரங்கள் மற்றும் நீர்வளங்களை அது அச்சுறுத்துகிறது.
  • நன்னீர் விநியோகம், பல்லுயிர்ப் பெருக்கம், இயற்கை வளங்கள் மற்றும் நதியின் கீழ் மட்டத்தில் வாழும் மக்கள் தொகை மற்றும் தொழில்களை நிலைநிறுத்துவதற்கு HKH பகுதி மிகவும் முக்கியமானது.
  • நிதி விநியோகத்தில் சீரற்ற தன்மையானது, சிறிய HKH நாடுகள் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது முக்கியமான நிதி இடைவெளிகளை எதிர் கொள்வதால், அவை பருவநிலை மாற்றத் தாக்கங்களுக்கு மிகவும் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்