TNPSC Thervupettagam

இமாச்சலப் பிரதேச மாநில தினம் 2026 - ஜனவரி 26

January 30 , 2026 17 hrs 0 min 25 0
  • 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று இமாச்சலப் பிரதேசம் ஒரு தலைமை ஆணையர் மாகாணமாக மாறியது.
  • 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று, இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு, அது ஒரு பகுதி C மாநிலமாக மாறியது.
  • 1956 ஆம் ஆண்டில், பகுதி A, B, மற்றும் C வகைப்பாடு ரத்து செய்யப்பட்டது, மேலும் இமாச்சலப் பிரதேசம் ஒரு ஒன்றியப் பிரதேசமாக மாறியது.
  • 1966 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, பஞ்சாபில் இருந்து மலைப் பகுதிகள் (காங்ரா, குலு, லாஹவுல்-ஸ்பிதி) இமாச்சலப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டன.
  • 1970 ஆம் ஆண்டின் இமாச்சலப் பிரதேச மாநிலச் சட்டத்தின் கீழ், 1971 ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று அது முழு மாநில அந்தஸ்தைப் பெற்று, இந்தியாவின் 18வது மாநிலமாக ஆனது.
  • "இமாச்சலப் பிரதேசம்" என்ற பெயருக்கு "பனியின் மடி" என்று பொருள் என்பதோடு மேலும் இது ஜம்மு காஷ்மீர், லடாக், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மற்றும் சீனாவுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்