கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் குத்ரேமுக் மலைத் தொடரில் ஒரு புதிய தாவர இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பேராசிரியர் P. செல்வ சிங் ரிச்சர்டு, இனப்பெருக்க உயிரியலுக்கு ஆற்றியப் பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் இதற்கு ‘இம்பேஷியன்ஸ் செல்வ சிங்கி’ என்று பெயரிடப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் 130 பூர்வீக இனங்களுடன் 280க்கும் மேற்பட்ட இம்பேஷியன்ஸ் வகைகள் இந்தியாவில் காணப் படுகின்றன என்பதோடு மேலும் இவற்றில் சுமார் 80% அருகி வரும் இனங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.