இயங்குபடம், மெய்நிகர் காட்சிகள், விளையாட்டு மற்றும் நகைச்சுவைச் சிறப்பு மையம்
January 26 , 2022 1303 days 564 0
கர்நாடகாவின் பெங்களூருவில் மகாதேவபுரா எனுமிடத்தில் இயங்குபடம், மெய்நிகர் காட்சிகள், விளையாட்டு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றிற்கான இந்தியாவின் முதல் சிறப்பு மையத்தினை (Animation, Visual Effects, Gaming, and Comics Center of Excellence) கர்நாடக அரசு திறந்து வைத்துள்ளது.
இந்தச் சிறப்பு மையமானது, கர்நாடக அரசின் ஒரு புத்தாக்க முன்னெடுப்பின் கீழ், முன்னோடியாகத் திகழும் ஒரு உயர் தொழில்நுட்ப மின்னிலக்க ஊடக மையத்துடன் (digital media hub) சேர்ந்து தொடங்கப்பட்டது.
இதற்கு மின்னணுத் தகவல் தொழில்நுட்பத் துறை & உயிரித் தொழில்நுட்பத் துறை மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆகியவை நிதி வழங்குகிறது.
இது போன்ற ஒரு மையத்தினை நிறுவிய முதல் இந்திய மாநிலமாக கர்நாடகா மாறி உள்ளது.