TNPSC Thervupettagam
September 24 , 2025 3 days 45 0
  • இஸ்ரோ நிறுவனமானது, 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பணியாளர்கள் இல்லாத அதன் முதல் ககன்யான் ஆய்வுத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் பகுதியளவு மனித உருவிலான வியாமித்ரா எனும் இயந்திர மனிதனை விண்ணில் ஏவ உள்ளது.
  • வியோமித்ரா (விண்வெளி என பொருள்படும் வியோமா மற்றும் நண்பர் என பொருள்படும் மித்ரா என்ற சொற்கள்) விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு மனிதச் செயல்பாடுகளை உருவகப்படுத்தவும், உள் அமைப்புகளை மதிப்பிடவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • அலுமினியக் கலவையால் கட்டமைக்கப்பட்ட இது, வெப்பநிலை, அழுத்தம், CO அளவைக் கண்காணிக்கிறது மற்றும் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் உயிர் வாழ்வதற்கான ஆதரவு அமைப்புகளுடன் தொடர்பு கொள்கிறது.
  • எச்சரிக்கைகளை வெளியிடக் கூடிய இது ஆறு குழுச் செயல்பாடுகளை மேற்கொள்ளும் என்பதோடு மனித சைகைகளைப் பிரதிபலிக்கும் மற்றும் நுண் ஈர்ப்பு விசை போன்ற விண்வெளி நிலைமைகளை மதிப்பிடலாம்.
  • நாசாவின் ரோபோநாட் மற்றும் சீனாவின் சியாவோ ஹேங்கைப் போலல்லாமல், வியாமித்ரா விமானத்தில் உதவியாளராக இருப்பதற்குப் பதிலாக பறத்தலுக்கு முந்தைய பாதுகாப்பு சரிபார்ப்பாளராகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்