TNPSC Thervupettagam

இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விநியோக உத்தரவு 2026

March 27 , 2026 15 hrs 0 min 44 0
  • எரிவாயுப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்காக, அவசியப் பொருட்கள் சட்டம் 1955-இன் கீழ், 'இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோக உத்தரவு 2026'-ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்தியா தனது மொத்த எரிசக்திப் பயன்பாட்டில் இயற்கை எரிவாயுவின் பங்கினை 2025 ஆம் ஆண்டில் உள்ள 6.2%-லிருந்து 2030-க்குள் 15%-ஆக உயர்த்தத் திட்டமிட்டு உள்ளது.
  • இயற்கை எரிவாயு என்பது முக்கியமாக மீத்தேன் (CH) கொண்ட ஒரு புதைபடிவ எரிபொருளாகும்.
  • இது நுண்துகள்கள் (PM), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) மற்றும் சல்பர் ஆக்சைடுகளை (SOx) குறைப்பதன் மூலம் சுற்றுப்புற மாசைக் குறைக்கிறது.
  • இதன் நுகர்வு 2024-25 ஆம் நிதியாண்டில் 52 மில்லியன் டன்னிலிருந்து (MTPA), 2040-க்குள் 112 மில்லியன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • நகர எரிவாயு விநியோகம் (CGD), அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) மற்றும் ஒருங்கிணைந்த கட்டணக் கொள்கை ஆகியவை அரசின் முக்கியத் திட்டங்களாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்