இயற்கை மறுசீரமைப்புச் சட்டத்திற்கான ஐரோப்பிய ஆணையத்தின் ஒரு முன் மொழிவானது, ஒரு முழு கண்டம் அளவிலான, விரிவான சட்டம் மற்றும் பல்லுயிர் உத்தியின் ஒரு பகுதியாகும்.
இது சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மறுசீரமைப்பதற்கான பிணைப்பு சார்ந்த இலக்குகளை உருவாக்குவதற்கான ஒரு அழைப்பினை விடுக்கிறது.
இரசாயன பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை 50% வரை (2030 ஆம் ஆண்டிற்குள்) குறைத்தல், மரத்தின் மேல்பகுதியின் பரவலை (குறைந்தபட்சம் 10%) அதிகரித்தல் மற்றும் ஆறுகள் தடையின்றி ஓட வழி வகை செய்வது ஆகியவை இதில் அடங்கும்.