இயற்கை மற்றும் மக்களுக்கான உயர் லட்சியக் கூட்டணியில் இந்தியா அதிகாரப் பூர்வமாக இணைந்துள்ளது.
புதுடெல்லியில் பிரான்சு மற்றும் இந்திய நாட்டு அரசுகளுக்கிடையே நடத்தப் பட்ட ஒரு விழாவில் இந்தியா இந்தக் கூட்டணியில் இணைத்தது.
இந்தக் கூட்டணியானது 70 நாடுகளுக்கும் மேலான நாடுகளை உள்ளடக்கியக் குழு ஆகும்.
2030 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சமாக உலகின் 30% நிலம் மற்றும் பெருங் கடல்களைப் பாதுகாப்பதற்கான ஒரு சர்வதேச ஒப்பந்தத்தினை ஊக்குவிப்பதை இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது.