நிதி ஆயோக் "Empowering Farmers: Natural Farming Training Toolkit & Best Practices Guide" என்ற தலைப்பில் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இயற்கை விவசாயம் என்பது வேதிப்பொருட்கள் இல்லாத, கால்நடைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு விவசாய முறையாகும் என்பதோடுஇது பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்த பயிர்கள், மரங்கள் மற்றும் விலங்குகளை ஒருங்கிணைக்கிறது.
இது இயற்கையான சுற்றுச்சூழல் செயல்முறைகளை நம்பியுள்ளதுடன் வழக்கமான விவசாயத்தைப் போலன்றி வெளிப்புற இரசாயன இடுபொருட்களைத் தவிர்க்கிறது.
இந்த அணுகுமுறை சாகுபடி செலவைக் குறைத்து, வேளாண் வருமானத்தை மேம்படுத்துவதுடன் மண்ணின் கரிம கார்பன் மற்றும் நுண்ணுயிர் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
இது நீர் மற்றும் மின்சாரத்தைச் சேமிப்பதுடன் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கிறது.