TNPSC Thervupettagam

இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு 2025

November 25 , 2025 2 days 52 0
  • கோவையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாட்டினைத் பிரதமர் தொடங்கி வைத்தார்.
  • 9 கோடி விவசாயிகளுக்கு 18,000 கோடி ரூபாய் மதிப்பிலான 21வது PM-KISAN (பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி) தவணையையும் அவர் தொடங்கி வைத்தார்.
  • இந்த நிகழ்வில் KCC (கிசான் கடன் அட்டை) ஆதரவு மற்றும் உயிரி உரங்கள் மீதான GST குறைப்பு உள்ளிட்ட அரசு திட்டங்கள் சிறப்பிக்கப்பட்டன.
  • ஒரு பயிர் பருவத்திற்கு என்று ஒரு ஏக்கரிலான இயற்கை வேளாண்மை என்பதை மேற் கொள்ள முயற்சிப்பதை ஊக்குவிப்பதற்காக "ஒரு ஏக்கர், ஒரு பருவம்" என்ற திட்டம் அறிவிக்கப் பட்டது.
  • மண் அமைப்பை மேம்படுத்தவும், இரசாயனப் பயன்பாட்டைக் குறைக்கவும், நிலையான விளைச்சலைப் பராமரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி இயற்கை வேளாண் குழுக்கள் நிறுவப்பட முன்மொழியப்பட்டன.
  • கிராமங்களில் காய்கறிகளில் தன்னிறைவு, இயற்கை முறை விதை வலையமைப்புகள், வேளாண் காடுகள், உரம் தயாரிக்கும் திட்டங்கள், நிலத்தடி நீர் மீளேற்றம் மற்றும் தேசிய இயற்கை வேளாண்மை வாரியம் ஆகியவையும் இந்த தீர்மானங்களில் முன்மொழியப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்