இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான உயர் நிலைக் குழு
March 31 , 2020 1969 days 593 0
21 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு நாடு இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான முயற்சிகளை எடுப்பதற்காக ஒரு உயர் நிலைக் குழுவை பிரதம மந்திரியின் அலுவலகம் அமைத்துள்ளது.
இந்தக் குழுவானது சுகாதார நலம், துயர் நிலைகளைக் குறைத்தல் மற்றும் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல் ஆகியவற்றிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைக்கும்.
இந்தக் குழுவானது பிரதம மந்திரியின் முதன்மைச் செயலாளரான பி.கே.மிஸ்ரா என்பவரின் தலைமையின் கீழ் செயல்பட இருக்கின்றது.
மற்றொரு பணிக் குழுவானது நிதி ஆயோக்கின் உறுப்பினரான வி.கே.பால் என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது மருத்துவ உபகரணங்கள் விநியோகம், மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைத்தல் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து செயல்படுவதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்துப் பரிந்துரை செய்யும்.