TNPSC Thervupettagam

இரசாயனங்கள், கழிவு மற்றும் மாசுபாடு குறித்த குழு

June 29 , 2025 15 hrs 0 min 32 0
  • உருகுவேயின் புன்ட்டா டெல் எஸ்டே எனுமிடத்தில் இரசாயனங்கள், கழிவுகள் மற்றும் மாசுபாடு குறித்த புதிய உலகளாவிய அறிவியல் சார் கொள்கை குழு தொடங்கப் பட்டு உள்ளது.
  • இது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) கீழ் உருவாக்கப்பட்டது.
  • மாசுபாட்டினை எதிர்கொள்ள, அபாயகரமான இரசாயனங்கள் மற்றும் கழிவுகளை மேலாண்மை செய்ய மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை உருவாக்கம் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தைப் மிகவும் நன்கு பாதுகாப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் குழுவானது, பருவநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC) மற்றும் பல்லுயிர்ப்பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு மீதான சேவைகள் தொடர்பான அரசுகளுக்கிடையேயான ஒரு அறிவியல் சார் கொள்கைத் தளம் (IPBES) ஆகியவற்றுடன் இணைகிறது.
  • இந்த 3 குழுக்களும் சேர்ந்து, பருவநிலை மாற்றம், பல்லுயிர்ப் பெருக்க இழப்பு மற்றும் மாசுபாடு ஆகிய மூன்று புவி சார் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்த ஒரு மும்மை அமைப்பினை உருவாக்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்