நெய்வேலி உத்தரப் பிரதேச மின் நிறுவனம் (NUPPL) என்பது NLC இந்தியா லிமிடெட் மற்றும் உத்தரப் பிரதேச இராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாம் லிமிடெட் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.
உத்தரப் பிரதேசத்தின் கடம்பூர் தாலுக்காவில் உள்ள NUPPL நிறுவனத்தின் 1980 மெகா வாட் திறன் கொண்ட மிகை மாறுநிலை வெப்பநிலை மற்றும் அழுத்த அனல் மின் நிலையத்தின் இரண்டாம் (660 மெகாவாட்) அலகின் மின் உற்பத்தி இயந்திரத்தின் (TG) சுழற்சி மற்றும் ஒருங்கிணைப்பினை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.
சுமார் 765 kV கட்டமைப்புடன் அனல் மின் நிலையத்தின் ஒருங்கிணைப்பு, ஒரே மற்றும் தடையற்ற முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாம் அலகின் ஒருங்கிணைப்பானது, NUPPL அமைப்பின் வணிகச் செயல் பாட்டுப் பிரகடனத்தை (COD) நோக்கிய பயணத்தில் ஒரு மிக முக்கியமான படியைக் குறித்தது.