இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஆனது 12 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் (UTs) வாக்காளர் பட்டியலைத் திருத்த உள்ளது.
இறுதி வாக்காளர் பட்டியல்கள் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 07 ஆம் தேதியன்று வெளியிடப் படும்.
இதில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, புதுச்சேரி, உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், கோவா, சத்தீஸ்கர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் இதில் அடங்கும்.
ஆதாரை அடையாளச் சரிபார்ப்புக்கு பயன்படுத்தலாமே தவிர, வயது அல்லது குடியுரிமைக்கான சான்றாகப் பயன்படுத்த இயலாது.
இது வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின் 2 ஆம் கட்டமாகும்.
இதன் முதல் கட்டம் ஜூன் 24 அன்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 என்பதின் பிரிவு 21(3) இன் கீழ் மற்றும் வாக்காளர் பதிவு விதிகள், 1960ன் கீழ் அறிவிக்கப்பட்டது.