TNPSC Thervupettagam

இரண்டாவது சிங்கங்களின் வாழ்விடம் – பர்தா

October 5 , 2026 11 hrs 0 min 50 0
  • வன நிர்வாகத்தை வலுப்படுத்தவும், குஜராத்தின் பர்தாவை ஆசிய சிங்கங்களுக்கான இரண்டாவது வாழ்விடமாக மேம்படுத்தவும், போர்பந்தர் வனக்கோட்டத்தை குஜராத் மாநிலம் மறுசீரமைத்துள்ளது.
  • 143 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய சிங்கங்கள் இயற்கையாகவே பர்தாவிற்குத் திரும்பியதைத் தொடர்ந்து இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
  • குஜராத்தின் 2026 ஆம் ஆண்டு சிங்கங்கள் கணக்கெடுப்பில் 891 ஆசிய சிங்கங்கள் பதிவாகியுள்ளன, இது 2020 ஆம் ஆண்டில் 674 ஆக இருந்தது.
  • பர்தா குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் அமைந்துள்ளது மற்றும் இது கிர் நிலப் பரப்பைத் தாண்டி ஒரு மாற்று வாழ்விடத்தை வழங்கும்.
  • குஜராத்தில் உள்ள கிர் நிலப்பரப்பு ஆசிய சிங்கங்களின் முதல் மற்றும் முக்கிய இயற்கை வாழ்விடமாகும்.
  • ஆசிய சிங்கம் சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தால் (IUCN) அருகி வரும் இனமாக (Endangered) வகைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இயற்கையாகவே குஜராத்தில் மட்டுமே காணப் படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்