TNPSC Thervupettagam

இரண்டாவது நாடு தழுவிய டால்பின் கணக்கெடுப்பு

January 27 , 2026 10 hrs 0 min 40 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), உத்தரப் பிரதேசத்தின் பிஜ்னோரில் இருந்து இந்தியாவின் இரண்டாவது இந்திய அளவிலான டால்பின் கணக்கெடுப்பைத் தொடங்கியது.
  • இந்த கணக்கெடுப்பு, டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தினால் (WII) ஒருங்கிணைக்கப்பட்ட டால்பின் வளங்காப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு WWF இந்தியா, ஆரண்யாக், காகாரா, கோசி, மகாநந்தா, பிரம்மபுத்ரா, சுந்தரவனம், ஒடிசா மற்றும் சிந்து நதி அமைப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
  • முதல் முறையாக, சுந்தரவனம் மற்றும் ஒடிசாவில் உள்ள இராவடி/ஐராவதி டால்பின்களின் மதிப்பீட்டையும், கங்கை நதி டால்பின்கள் மற்றும் சிந்து நதி டால்பின்களுடன், வாழ்விடத் தரம் மற்றும் அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதையும் இது உள்ளடக்கியது.
  • முதல் நாடு தழுவிய கணக்கெடுப்பில் (2021–2023) உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளதுடன் சுமார் 6,327 நதி டால்பின்கள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்