இரண்டாவது பழமையான உருண்டைப்பாறை கண்டுபிடிப்பு - மத்தியப் பிரதேசம்
July 25 , 2026 60 days 212 0
மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பிச்சோர் உருண்டை கிரானைட் (Pichhore orbicular granite) பாறையை, சுமார் 2.56 பில்லியன் ஆண்டுகள் பழமையான, உலகின் இரண்டாவது பழமையான அறியப்பட்ட உருண்டைப்பாறையாக அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குட்டாவலி கிராமத்திற்கு அருகே காணப்பட்ட இப்பாறை, இந்தியாவின் பழமையான புவியியல் தொகுதிகளில் ஒன்றான பண்டேல்கண்ட் நிலையான பகுதி/கிராட்டனைச் சேர்ந்தது.
பழங்காலப் பாறைகளை ஆய்வு செய்யப் பயன்படும் யுரேனியம்-லீட் (U-Pb) சிர்கான் காலக் கணிப்பு முறையைப் பயன்படுத்தி இதன் வயது தீர்மானிக்கப்பட்டது.
உருண்டை கிரானைட்டில் முக்கியமாக குவார்ட்ஸ் மற்றும் ஃபெல்ட்ஸ்பாரால் ஆன ஆர்பிக்யூல்ஸ் (orbicules) எனப்படும் கோள அமைப்புகள் உள்ளன, அவை பெரும்பாலும் செறிவான அடுக்குகளில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆரம்பகாலப் பூமியின் வரலாற்றில் பழங்கால கண்ட மேலோட்டத்தின் மறு சுழற்சியைக் குறிக்கும் வகையில், 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான மரபுவழி சிர்கான் படிகங்களை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது.