இந்திய நாட்டின் பொதுச் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்காக என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது (ICMR) இரண்டாவது தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியலை (NEDL) வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பொதுச் சுகாதார அமைப்பின் அனைத்து மட்டங்களிலும் எந்த வகையான நோயறிதல் சோதனைகள் தரப்படுத்தப்பட வேண்டும் மற்றும் கிடைக்கப் பெற வேண்டும் என்பதை வரையறுப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டாயப் பட்டியலில் பின்வருபவை அடங்கும்:
கிராம சுகாதார மையங்களில் ஆறு முக்கிய நோயறிதல் சோதனைகள் அளிக்கப் பட வேண்டும்.
ஆயுஷ்மான் ஆரோக்கிய மந்திர்களில் (துணை மையங்கள்) சுமார் பதினைந்து சோதனைகள்,
ஆரம்ப சுகாதார மையங்களில் (PHC) அறுபத்தொன்பது சேவைகள்,
சமூக சுகாதார மையங்களில் (CHC) தொண்ணூற்றேழு சேவைகள், மற்றும்
மாவட்ட துணை மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் நூற்று அறுபத்தைந்து சோதனைகள் வரை.