அருணாச்சலப் பிரதேசத்தின் சாங்லாங் மாவட்டத்தில் ஓபியோர்ஹைசா ஷிடியென்சிஸ் (Ophiorrhiza shidiensis) மற்றும் ஓபியோர்ஹைசா பெமே (Ophiorrhiza pemae) ஆகிய இரண்டு புதிய தாவரச் சிற்றினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
இந்த இரண்டு சிற்றினங்களும் காஃபி, மேடர் அல்லது பெட்ஸ்ட்ரா குடும்பம் என்று அழைக்கப்படும் ரூபியேசி (Rubiaceae) குடும்பத்தைச் சேர்ந்தவையாகும்.
இந்தோ-பிரம்மா பல்லுயிர்தன்மை செழுமைப் பகுதிக்குள் உள்ள விஜயநகரில் இவை காணப்பட்டன.
காந்திகிராமத்தின் லிசு (யோபின்) பெயரான ஷிடி (Shidi) என்பதன் அடிப்படையில் ஓபியோர்ஹைசா ஷிடியென்சிஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஓபியோர்ஹைசா பெமே என்ற பெயர் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா கண்டுவை கௌரவிக்கும் விதமாகச் சூட்டப்பட்டுள்ளது.