இரண்டு மரபணு சிகிச்சை முறைகளுக்கு ஒப்புதல் – அமெரிக்கா
December 18 , 2023 505 days 315 0
12 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளில் அரிவாள் வடிவ உயிரணு இரத்தசோகை நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான காஸ்கேவி மற்றும் லிஃப்ஜீனியா ஆகிய இரண்டு மரபணு சிகிச்சைகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.
பீட்டா தலசீமியா சிகிச்சைக்கான காஸ்கேவி மரபணு சிகிச்சையை அங்கீகரிப்பது குறித்த அதன் முடிவு ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முடிவுகள், நோய்களுக்குச் சிகிச்சையளிக்க CRISPR-Cas9 என்ற நுட்பத்தினைப் பயன்படுத்தும் மரபணு சிகிச்சையைத் தொடங்கப் படுவதைக் குறிக்கின்றன.