இராஜஸ்தானின் ஜலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சாதிப் பஞ்சாயத்து, ஜாட் சமூகத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்த திருமணமான பெண்கள் திறன்பேசியைப் பயன்படுத்துவதை தடை செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதியன்று காஜிபூர் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப் பட்டது.
இந்தத் தடையானது 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்திலிருந்து அமலுக்கு வரும்.
சௌத்ரி குலத்தைச் சேர்ந்த சுந்தமாதா பட்டி பஞ்சாயத்தால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு 15 கிராமங்களுக்குப் பொருந்தும்.
திருமணமான பெண்கள் திருமணங்கள், பொது இடங்கள் அல்லது அண்டை வீடுகளுக்கு ஒளிப்படப் பதிவு அம்சங்கள் பொருத்தப்பட்ட திறன் பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.
குரல் சார் அழைப்புகளை மேற்கொள்வதற்கு அடிப்படை அம்சங்கள் கொண்ட (கீபேட்) தொலைபேசிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன அதே நேரத்தில் மாணவர்கள் கல்விக்காக வீட்டில் திறன் பேசிகளைப் பயன்படுத்தலாம்.