TNPSC Thervupettagam

இராணுவ குவாண்டம் திட்டக் கொள்கை கட்டமைப்பு

January 26 , 2026 14 hrs 0 min 21 0
  • பாதுகாப்புப் படைகளின் தலைவர் (CDS) இராணுவ குவாண்டம் திட்டக் கொள்கை கட்டமைப்பை வெளியிட்டார்.
  • இது இந்திய ஆயுதப் படைகளில் குவாண்டம் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதற்கான ஒரு உத்தி சார் கொள்கை ஆவணமாகும்.
  • இந்தக் கட்டமைப்பு கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த ஏற்பு மூலம் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை மீது கவனம் செலுத்துகிறது.
  • இது குவாண்டம் தொடர்பு, குவாண்டம் கணினி, குவாண்டம் உணர்திறன் மற்றும் அளவியல், மற்றும் குவாண்டம் பொருட்கள் மற்றும் சாதனங்கள் ஆகிய நான்கு முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது.
  • இது சிவில்-இராணுவ இணைவு அணுகுமுறை மூலம் தேசிய குவாண்டம் திட்டத்துடன் பாதுகாப்புத் தேவைகளை சீரமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கொள்கை பாதுகாப்பான தகவல் தொடர்பு, சிறந்த உணர்திறன் மற்றும் எதிர்காலப் போர்க்களத் தயார்நிலைக்கான ஒரு செயல் திட்டத்தினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்