TNPSC Thervupettagam

இராஷ்ட்ர பிரேர்ண ஸ்தலம்

December 27 , 2025 6 days 62 0
  • பிரதமர் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள இராஷ்ட்ர பிரேர்ண ஸ்தலத்தினைத் திறந்து வைத்தார்.
  • இது முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் 101வது பிறந்தநாளைக் குறிக்கிறது.
  • இதில் வாஜ்பாய், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீனதயாள் உபாத்யாயா ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் இடம்பெற்றிருந்தன.
  • தாமரை வடிவிலான அதி நவீன அருங்காட்சியகம் இந்தியாவின் தேசியப் பயணம், பாரதிய ஜன சங்கத்தின் (BJS) உருவாக்கம் மற்றும் டிஜிட்டல் மற்றும் அதிவேக தொழில் நுட்பங்கள் மூலம் இந்தத் தலைவர்களின் பங்களிப்புகளைக் காட்சிப் படுத்தியது.
  • இது லக்னோ மேம்பாட்டு ஆணையத்தின் (LDA) பசந்த் குஞ்ச் என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்டது என்பதோடு இதன் கட்டுமானம் 2022 ஆம் ஆண்டில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்