TNPSC Thervupettagam
October 29 , 2025 15 hrs 0 min 37 0
  • தமிழ்நாட்டின் குற்றப்பிரிவு - குற்றவியல் புலனாய்வுத் துறை (CB-CID), இரிடியம் மோசடி தொடர்பாக 57 பேரைக் கைது செய்துள்ளது.
  • இரிடியம் என்பது 77 அணு எண் கொண்ட தனிமம் ஆகும்.
  • இது மிகவும் அடர்த்தியானது மற்றும் அரிமானத்தினை எதிர்க்கும் தன்மை கொண்டது என்று அறியப்படுகின்ற பிளாட்டினம் குழுவில் உள்ள ஒரு கடினமான, உடையக் கூடிய, வெள்ளி-வெள்ளை தாண்டல்/நிலைமாற்ற உலோகமாகும்.
  • இது மிக முக்கியமான தனிமங்களில் ஒன்றான பிளாட்டினம் கொண்ட தனிமங்களின் குடும்பத்தைச் சேர்ந்தது.
  • இது 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய வேதியியலாளர் ஸ்மித்சன் டென்னன்ட் என்பவரால் பிளாட்டினம் தாதுக்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
  • இது தாண்டல்/நிலைமாற்ற உலோகக் குழுவில் வருகிறது.
  • இரிடியத்திற்கான பயன்பாடுகளில் ஊற்று எழுதுகோல் முனைகள் (ஆஸ்மியத்துடன் கலக்கப் பட்டவை), திசைகாட்டி தாங்கு உருளைகள், உயர்-வெப்பநிலைக் குடுவைப் பொருட்கள் மற்றும் கனரக மின் தொடர்பு அமைப்புகள் ஆகியவை அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்