TNPSC Thervupettagam

இரட்டை செயல்பாட்டு MXene வினையூக்கி

March 26 , 2026 15 hrs 0 min 45 0
  • கவுஹாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவன (IIT) ஆராய்ச்சியாளர்கள், ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் சூரிய சக்தி மூலம் உப்புநீரைக் குடிநீராக்குதல் ஆகிய இரண்டு பணிகளையும் செய்யக் கூடிய மேம்பட்ட MXene சார்ந்த பொருளை உருவாக்கியுள்ளனர்.
  • பாரம்பரிய பிளாட்டினம் சார்ந்த வினையூக்கிகளுடன் ஒப்பிடும் போது, நீர் மின்னாற் பகுப்பு மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்வதில் இந்தப் பொருள் மிகக் குறைந்த ஆற்றல் தேவையுடன் சிறந்த செயல்திறனைக் காட்டுகிறது.
  • MXene-களை அடிப்படையாகக் கொண்ட இவை மேற்பரப்புச் செயல்பாடு மற்றும் செயல் திறனை மேம்படுத்துவதற்காக வேண்டி மிக மெல்லிய ரிப்பன் போன்ற கட்டமைப்புகளாக மாற்றப்பட்டுள்ளன.
  • வினையூக்க செயல்பாட்டை அதிகரிக்கவும், மின்னூட்ட பரிமாற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் ஹைட்ரஜன் வெளியீட்டுத் திறனை அதிகரிக்கவும் இதன் கட்டமைப்பில் ருத்தேனியம் அணுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ஜானஸ் ஆவியாக்கியைப் பயன்படுத்தி சூரிய சக்தியில் இயங்கும் உப்பு நீக்கும் அமைப்பாகவும் செயல்படுகிற இதே பொருள் கடல்நீரைத் திறம்பட பாதுகாப்பான குடிநீராக மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்