September 29 , 2021
1385 days
773
- சமீபத்தில், சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இருளாற்றலை நேரடியாகக் கண்டறிந்துள்ளது.
- XENON1T பரிசோதனையில் அவர்கள் சில எதிர்பாராத முடிவுகளை கவனித்தது மட்டுமல்லாமல் இருளாற்றலே அதற்குக் காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.
- இருளாற்றல் என்பது ஈர்ப்பு விசைக்கு நேர்மாறாக செயல்படக் கூடிய எதிர்மறையான மற்றும் தள்ளுவிசையுடன் கூடிய அழுத்தத்தைக் கொண்ட ஒரு அனுமான வடிவ ஆற்றலாகும்.
- XENON1T என்பது உலகின் மிக முக்கியமான ஒரு கரும்பொருள் சோதனையாகும்.
- இது இத்தாலியில் உள்ள INFN நேசியோனலி டெல் கிரான் சாசோ என்ற ஆய்வகத்தில் நிலத்திற்கடியில் ஆழமான இடத்தில் இயக்கப் படுகிறது.

Post Views:
773