இரு குழந்தை நெறிமுறை குறித்த உச்ச நீதிமன்ற விளக்கம்
November 13 , 2026 2 days 49 0
இந்தியாவின் குறைந்து வரும் கருவுறுதல் விகிதத்தைக் குறிப்பிட்டு, இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றதற்காக மக்களை தண்டிக்கும் சட்டங்களின் பொருத்தம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 3-இல் இருந்து 1.9 ஆகக் குறைந்துள்ளது, இது மாற்று கருவுறுதல் விகிதமான (replacement fertility rate) 2.1-க்குக் குறைவாகும்.
மாற்று விகிதமான 2.1 என்பது ஒரு தலைமுறை தன்னைத் தானே மாற்றிக் கொள்ள ஒரு பெண்ணுக்குத் தேவைப்படும் சராசரி குழந்தைகளின் எண்ணிக்கையாகும்.
குறையும் கருவுறுதல் விகிதமானது முதியோர் மக்கள் தொகை அதிகரிக்கவும், உழைக்கும் மக்கள் தொகையின் பங்கு குறையவும் வழிவகுக்கும் என்று நீதிமன்றம் எச்சரித்தது.
நீதிபதி பி.எஸ். நரசிம்மா தலைமையிலான அமர்வு, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் அரசியல் பிரதிநிதித்துவத்தையும், சரத்து 21-இன் கீழ் மகப்பேறு மீதான தனிப்பட்ட விருப்ப உரிமையையும் (reproductive autonomy) கட்டுப்படுத்தலாம் என்று கவனித்தது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி நிபந்தனையாக இரு குழந்தை நெறிமுறையைத் தொடருவது குறித்த சட்டப்பூர்வ கேள்வியை நீதிமன்றம் ஒரு பெரியஅமர்வுக்கு மாற்றியது.
அது, ஜாவேத் எதிர் ஹரியானா அரசு வழக்கில் 2003-ல் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனைக்காக ஒரு பெரிய அமர்வுக்குப் பரிந்துரைத்தது.
தற்போதைய வழக்கின் பெயர்: மங்களா பீம்ராவ் இங்ளே எதிர் கூடுதல் ஆணையர், அமராவதி கோட்டம் மற்றும் பிறர்.