இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்சே, அந்த நாட்டில் அவசரகால நிலையைப்பிரகடனப் படுத்தியுள்ளார்.
இது நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கு பல்வேறு அதிகாரங்களை வழங்குகிறது.
இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக எழுந்த கோபத்துடன் நூற்றுக்கணக்கான குடிமக்கள் அவரது வீட்டை முற்றுகையிட முயன்றச் செய்ததை அடுத்து இது அறிவிக்கப்பட்டது.
இலங்கை நாட்டில் பணவீக்கம் 18.7 சதவீதத்தை எட்டியுள்ளது.
உணவுப் பொருட்களின் விலை 30.1 சதவீதம் உயர்ந்துள்ளது.
டீசல் தட்டுப்பாடும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்னியற்றிகளை இயக்க டீசல் இல்லாததால் அங்கு தினமும் 13 மணி நேரம் மின் வெட்டு ஏற்படுகிறது.