இலட்சத்தீவுகளில் ஒன்றான பாராலி I - முழுமையாக மறைந்துவிட்டது
September 8 , 2017 2977 days 1271 0
கடலரிப்பின் காரணமாக இலட்சத்தீவுகளின் ஒரு பகுதியில் யாரும் குடியேறாத தீவுகளில் ஒன்றான பாராலி I என்ற தீவு முழுமையாக மறைந்துவிட்டது.
பங்காராம் என்ற பவளத்தீவின் ஒரு பகுதியான பாராலி - I என்ற தீவு 1968ம் வருடம் 032 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும். இது லட்சத்தீவுகளில் உள்ள குடியேற்றமில்லாத தீவுகளில் ஒன்றாகும். இது, தற்சமயம் கடுமையான கடலரிப்பின் காரணமாக முற்றிலும் மறைந்து விட்டது.
தற்பொழுது விஞ்ஞானிகள் வழக்கமான அடிப்படையிலான பாதுகாப்பு முறைகளோடு கூடுதலாக மாங்குரோவ் காடுகள் மூலம் உயிரியல் ரீதியான பாதுகாப்பிற்கான முயற்சிகள் வழியாகவும் இத்தீவுகளைப் பாதுகாப்பதற்கான சாத்தியக் கூறுகளைப் பரிந்துரைத்துள்ளனர்.