இலவச ரேஷன் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
November 8 , 2023 618 days 412 0
இலவச உணவு தானிய வழங்கீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா (PMGKAY) அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் நீட்டிப்பானது, 80 கோடி மக்களுக்குப் பயனளிக்கும்.
இதற்காக ஆண்டிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.
உணவுப் பாதுகாப்புச் சட்டமானது, நகர்ப்புற மக்களில் 50 சதவிகிதம் மற்றும் கிராமப் புற மக்களில் 75 சதவிகிதம் மக்களுக்குப் பயனளிக்கிறது.
உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்த்யோதய் அன்ன யோஜனா (AAY) மற்றும் முன்னுரிமை வழங்கப்படும் குடும்பங்கள் என்ற இரண்டு வகையான பயனாளிக் குடும்பப் பிரிவுகள் உள்ளன.