இளஞ்சிவப்பு காய்ப்புழு பாதிப்பு எதிர்ப்புத் திறன் கொண்ட GM பருத்தி வகை
March 22 , 2025 272 days 241 0
லக்னோவில் உள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையின் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR-NBRI) அறிவியலாளர்கள் உலகின் முதல் மரபணு மாற்றப்பட்ட (GM) பருத்தி வகையினை உருவாக்கியுள்ளதாகக் கூறியு உளனர்.
இது இளஞ்சிவப்புக் காய்ப்புழு (PBW) பாதிப்பிற்கான முழு எதிர்ப்புத் திறன் கொண்டது.
PBW என்பது இந்தியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் பருத்திப் பயிரைப் பாதிக்கும் ஒரு பேரழிவு தரும் பூச்சியாகும்.
2015-2016 ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்திய மற்றும் தென்னிந்தியாவில் உள்ள பிற பருத்தி வளரும் பகுதிகளில் PBW தொற்று பதிவாகியுள்ளது.