இளஞ்சிவப்பு சிறிய நட்சத்திரங்களிலிருந்து ஒளிக் கீற்றுகள்
October 26 , 2018 2407 days 804 0
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி நாசா விஞ்ஞானிகள் இளஞ்சிவப்பு சிறிய நட்சத்திரங்களிலிருந்து வரும் கடுமையான ஊதாக் கதிர்கள், தன்னைச் சுற்றி வரும் கிரகங்களின் வளிமண்டலங்களைப் பாதிப்படையச் செய்து அவற்றை வசிக்க இயலாததாக மாற்றிவிடும் எனக் கண்டறிந்துள்ளனர்.
ஹப்பிள் ஆனது ஹஸ்மத் (HAZMAT - Habitable Zones and M dwarf Activity across Time) என்ற ஒரு பெரிய திட்டத்தின் மூலம் இத்தகைய நட்சத்திரங்களைக் கண்டுபிடித்து வருகின்றது.
சிறிய சிவப்பு நட்சத்திரங்களுக்கான வானவியல் பெயர் எம்.ட்வார்ப் (M. Dwarf) என்பதாகும்.
குறைந்த நிறையுடைய நட்சத்திரங்களைச் சுற்றியுள்ள கிரகங்களின் வசிப்பிடத் தன்மையை அறிந்து கொள்ள உதவுவதே ஹஸ்மத் திட்டத்தின் நோக்கமாகும்.
ஹஸ்மத் என்ற வார்த்தை சுற்றுப்புறத்திற்கும், உயிர்களுக்கும் ஆபத்தினை ஏற்படுத்தும் பொருட்கள் என்று விவரிக்கின்றது.
ஹஸ்மத் திட்டம் மூன்று வித்தியாசமான பருவங்களில் உள்ள இளைய, நடுத்தர மற்றும் வயதான சிறிய சிவப்பு நட்சத்திரங்களின் மீதான புறஊதாக் கதிர்கள் மீதான ஆய்வுத் திட்டமாகும்.
இளஞ்சிவப்பு சிறிய நட்சத்திரம் (ட்வார்ப்/Dwarf) நமது அண்டத்தில் மிகச் சிறிய அளவில் நீண்ட வாழ்வைக் கொண்டு மிகுதியாக உள்ள ஒரு வகையான நட்சத்திரமாகும்.