TNPSC Thervupettagam

இஸ்தான்புல் உடன்படிக்கை – துருக்கி விலகல்

July 7 , 2021 1399 days 604 0
  • பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த ஒரு உடன்படிக்கையிலிருந்து துருக்கி விலகியுள்ளது.
  • இந்த உடன்படிக்கையானது பாரம்பரியக் குடும்ப முறையை இழிவுபடுத்தி, விவாகரத்துகளை ஊக்குவித்து, சமுதாயத்தில் LGBTQ சமுதாயத்தினரை ஏற்றுக் கொள்ளச் செய்வதை ஊக்குவிப்பதாக துருக்கி கூறுகிறது.
  • அது தவிர பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் போதுமான சட்டங்கள் தனது நாட்டிலேயே உள்ளதாகவும் துருக்கி கூறுகிறது.
  • இஸ்தான்புல் உடன்படிக்கையானது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்து அதனை எதிர்கொள்வதற்கான உலகின் முதலாவது பிணை ஒப்பந்தமாகும்.
  • இந்த உடன்படிக்கையானது 2011 ஆம் ஆண்டில் ஐரோப்பிய அமைச்சர்கள் குழு ஒன்றியத்தினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

குறிப்பு

  • 2011 ஆம் ஆண்டில் இந்த  உடன்படிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய முதல் நாடு எனும் பெருமையை துருக்கி பெற்றது.
  • 2012 ஆம் ஆண்டு மார்ச் 08 அன்று தனது உள்நாட்டுச் சட்டத்தில் இஸ்தான்புல் உடன்படிக்கையை துருக்கி இணைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்