TNPSC Thervupettagam

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் K. கஸ்தூரிரங்கன்

April 27 , 2025 3 days 42 0
  • 30 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்ரோவில் பணியாற்றிய கஸ்தூரி ரங்கன்  சமீபத்தில் காலமானார்.
  • 1994 மற்றும் 2003 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் அவர் இந்த முக்கிய அமைப்பின் தலைவராக இருந்தார்.
  • பாஸ்கரா-I & II எனப்படுகின்ற இந்தியாவின் முதல் இரண்டு சோதனை வழிப் புவிக் கண்காணிப்புச் செயற்கைக்கோள்களின் திட்ட இயக்குநராக இருந்தார்.
  • அவர் IRS-1A எனப்படும் முதல் செயல்பாட்டு இந்தியத் தொலை உணர்வு செயற்கைக் கோள்  திட்டத்தினை வழிநடத்தினார்.
  • அவர் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் ஆகியவற்றைப் பெற்றவர் ஆவார்.
  • டாக்டர் கஸ்தூரிரங்கன் மாநிலங்களவை உறுப்பினராகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் போது அமைக்கப்பட்டத் திட்ட ஆணையத்தின் ஒரு உறுப்பினராகவும் இருந்தார்.
  • சமீபத்தில், 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை வரைவுக் குழுவிற்கு அவர் தலைமை தாங்கினார்.
  • மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் பாதுகாப்பு குறித்த கஸ்தூரிரங்கன் குழுவின் தலைவராகவும் அவர் இருந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்