TNPSC Thervupettagam

இஸ்ரோ - பிஎஸ்எல்வி-சி52

February 16 , 2022 1209 days 579 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது சமீபத்தில் பிஎஸ்எல்வி-சி52  என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
  • இந்த ராக்கெட் இரண்டு சிறிய செயற்கைக் கோள்களையும் EOS - 04 என்ற ஒரு செயற்கைக் கோளையும் விண்ணிற்கு ஏந்திச் சென்றது.
  • அந்த இரண்டு சிறிய செயற்கைக் கோள்கள் இன்ஸ்பைர்சாட்- 1 மற்றும் INS - 2TD (ஐஎன்எஸ் - 2டிடி) ஆகியவை ஆகும்.
  • இது 2022 ஆம் ஆண்டில் ஏவப்பட்ட  முதல் ராக்கெட் ஆகும்.
  • EOS - 03 செயற்கைக்கோளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு ஏவப் பட்ட முதல் ராக்கெட் இதுவாகும்.
  • கிரையோஜெனிக் எஞ்சினின் மேல் நிலையில் தீப்பொறியை உருவாக்கும் தொழில் நுட்பம் சரியாக செயல்படாததால்  EOS - 03  செயற்கைக்கோளை ஏவும் பணி தோல்வி அடைந்தது.
  • ஐஎன்எஸ் - 2டிடி என்பது இந்தியா மற்றும் பூடான் ஆகியவை இணைந்து உருவாக்கிய ஒரு செயற்கைக்கோள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்