இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் அறிவியலாளர் / விஞ்ஞானி நெல்லை சு.முத்து சமீபத்தில் காலமானார்.
அவர் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மூத்த அறிவியலாளராகப் பணியாற்றினார்.
அவர் மலேசியாவின் உலகத் தமிழ்க் கவிஞர்கள் சங்கத்தினால் வழங்கப் படும் கவி மாமணி விருதைப் பெற்றவர் ஆவார்.
அறிவியல், குழந்தைகள் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு போன்ற சில தலைப்புகளில் 70க்கும் மேற்பட்டப் புத்தகங்களை எழுதியுள்ளார்.
அவரது நான்கு புத்தகங்களுக்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த புத்தக விருது மற்றும் சிறந்த ஆசிரியர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அவரது 'விண்வெளி 2057' (SKY 2057) என்ற புத்தகம் ஆனது 2000 ஆம் ஆண்டிற்கான கணிதம், வானியல், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகளில் சிறந்தப் புத்தக விருதை வென்றது.
மற்றொருப் புத்தகமான 'அறிவூட்டும் விஞ்ஞான விளையாட்டு' (அறிவை வழங்கும் அறிவியல் தந்திரங்கள்), 2004 ஆம் ஆண்டிற்கான குழந்தைகள் இலக்கியப் பிரிவில் சிறந்தப் புத்தக விருதை வென்றது.
'ஐன்ஸ்டீனும் அண்டவெளியும்' (ஐன்ஸ்டீனும் விண்வெளியும்) என்ற புத்தகம் ஆனது 2005 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கை வரலாறு மற்றும் மிகவும் தனிப்பட்ட வரலாற்றுப் பிரிவுகளில் சிறந்த புத்தக விருதை வென்றது.
அவர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் அவர்களுடன் பணி ஆற்றினார்.