இஸ்லாமோஃபோபியாவை எதிர்ப்பதற்கான சர்வதேச தினம் - மார்ச் 15
March 18 , 2022 1246 days 465 0
2022 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 15 ஆம் தேதியினை இஸ்லாமோ ஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு சர்வதேச தினமாக அறிவிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஒப்புதல் அளித்தது.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC - Organisation of Islamic Cooperation) சார்பில் பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் இந்தத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார்.
நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் எனுமிடத்தில் உள்ள இரண்டு மசூதிகளுக்குள் துப்பாக்கி ஏந்திய ஒருவர் நுழைந்து, 51 வழிபாட்டாளர்களைக் கொன்று, 40 பேரைக் காயப் படுத்திய பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் தினத்தினை இது குறிக்கிறது.