இ – சிகரெட்டுகள் மீதான தடை – மகாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான்
June 2 , 2019 2177 days 735 0
நிக்கோடின் எனும் போதைப் பொருளுக்கு அடிமையாவதலிலிருந்துப் பின்வாங்கச் செய்வதற்காக இ-சிகரெட்டுகள் மீது தடை விதிக்க மகாராஷ்டிரா மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன.
மின்னணு (electronic) முறையில் நிக்கோடின் வழங்கும் அமைப்புகள் பழமையான புகையிலைப் பொருட்களை விட மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கும்.
மகாராஷ்டிரா மாநில அரசு, இ-சிகரெட்டுகளைத் தவிர இ-சிகரெட்டுகளைப் போன்ற ஒரு சாதனம் மற்றும் மின்னணு ஹூக்கா ஆகியவற்றைத் தடை செய்துள்ளது.
இந்தத் தடைக்கான உத்தரவானது ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று கொண்டாடப்படும் உலகப் புகையிலையற்ற தினத்தின் போது இராஜஸ்தானில் வெளியிடப்பட்டது.