TNPSC Thervupettagam

ஈயத்தை அகற்றும் புதிய முறை - ஐஐடி கவுகாத்தி

July 13 , 2026 16 hrs 0 min 28 0
  • மாசடைந்த நீரிலிருந்து ஈயத்தை அகற்றுவதற்காக, சயனோபாக்டீரியாவைப் (நீலப்பசும் பாசி) பயன்படுத்தி ஒரு உயிரியல் பொருளை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் கவுகாத்தியின் (IITG) ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
  • உயிரியல் அறிவியல் மற்றும் உயிரிப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் தேபாசிஸ் தாஸ் தலைமையிலான ஆய்வுக்குழு, பாசிகளால் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரை நிறைந்த பொருளான எக்ஸோபாலிசாக்கரைடுகள் (EPS), நச்சுத்தன்மை வாய்ந்த ஈயத் துகள்களை உறிஞ்சும் திறன் கொண்டவை என்பதைக் கண்டறிந்து உள்ளது.
  • உருவாக்கப்பட்ட இந்த உயிரியல் பொருள், இயற்கை இரசாயனக் குழுக்கள் மூலம் ஈயத் துகள்களுடன் பிணைக்கப்படுவதன் மூலம் மாசடைந்த நீரிலிருந்து 66.2% ஈயத்தை அகற்றியது.
  • சயனோபாக்டீரியாக்கள் குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், நெல் வயல்கள் மற்றும் மெதுவாக நகரும் நன்னீர் நிலைகளில் இயற்கையாகவே கிடைப்பதுடன் இது இந்த முறையை நிலையானதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் ஆக்குகிறது.
  • இரசாயன வீழ்படிவாக்கல், சவ்வு வடிகட்டுதல் மற்றும் அயனிப் பரிமாற்றம் போன்ற வழக்கமான முறைகள் அதிக செலவுடையவை மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்திகளை உருவாக்கும் அதே வேளையில், இந்த முறையானது சிறந்த சுற்றுச் சூழலுக்கு உகந்த மாற்றீட்டை வழங்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்